தேர்தல் கூட்டணி: பேச்சு நடத்த குழு அமைத்த பா.ஜ.,
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்..ராஜா மற்றும் பா.ஜ., தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து