நகர்ப்புறத்தில் அடிச்சு தூக்கிய தி.மு.க.,

சட்டசபை தேர்தலில் நகர்ப்புறத்தில் தி.மு.க., அதிக தொகுதிகளை கைப்பற்றியது. தமிழகத்தில் 154 கிராமப்புறம், 30 சிறுநகரம், 50 நகர்ப்புற பகுதிகள் உள்ளன. இதில், நகர்ப்புறத்தில் 50ல் 40 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இதன் 'ஸ்டிரைக் ரேட்' 80 சதவீதம். கிராமப்புறத்தில் 96, சிறுநகரங்களில் 23ல் வென்றது.

* அ.தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 58, சிறுநகரத்தில் 7, கிராமப்புறத்தில் 10ல் வென்றது.

* ஒட்டுமொத்தமாக தி.மு.க., கூட்டணி 45.4 சதவீத ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க., கூட்டணிக்கு 39.7 சதவீதம் கிடைத்தது. 5.7 சதவீதம் முன்னிலை பெற்ற தி.மு.க.,வுக்கு 84 இடங்கள் கூடுதலாக கிடைத்தன.

* தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 44.9, சிறுநகரத்தில் 45.8, கிராமப்புறத்தில் 46.6 சதவீத ஓட்டு பெற்றன. அ.தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 41.8, சிறுநகரத்தில் 37.2, கிராமப்புறத்தில் 34.8 சதவீத ஓட்டு பெற்றன.

நகரில் ம.நீ.ம., ஆதிக்கம்கமலின் ம.நீ.ம., 2.7 சதவீத ஓட்டு பெற்றது. இதில் கிராமப்புறத்தில் 1.2, சிறுநகரத்தில் 3.3, நகர்ப்புறத்தில் 7.2 சதவீத ஓட்டு பெற்றது. மற்ற கட்சிகள் கிராமப்புறத்தில் 12.2, சிறுநகரத்தில் 13.7, நகர்ப்புறத்தில் 11.3, சதவீத ஓட்டு பெற்றன. ஒட்டுமொத்தமாக 12.2 சதவீத ஓட்டு பெற்றன.

2016ல் எப்படி?2016, சட்டசபை தேர்தலில் கிராமப்புறத்தில் அ.தி.மு.க., 94 தொகுதிகளை வென்றது. இதன் 'ஸ்டிரைக் ரேட்' 61 சதவீதம். சிறுநகரத்தில் 17, நகர்ப்புறத்தில் 23 இடங்களில் வென்றது. தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 59, சிறுநகரத்தில் 12, நகர்ப்புறத்தில் 27 இடங்களில் வென்றன. அ.தி.மு.க., 40.8, திமுக கூட்ணி 39.7 சதவீத ஒட்டு பெற்றன. இதன் வித்தியாசம் 1.1 சதவீதம் தான். இதில் கிராமப்புறத்தில் அ.திமுக 41.1, திமுக 39.5 சதவீத ஓட்டு பெற்றன. சிறுநகரத்தில் அ.தி.மு.க., 39.9, தி.மு.க., கூட்டணி 39.3 சதவீத ஓட்டு பெற்றன. நகர்ப்புறத்தில் தி.மு.க., கூட்டணி 40.7, அ.தி.மு.க., 40.4 சதவீத ஓட்டு பெற்றன. அப்போதும் நகர்ப்புறத்தில் தி.மு.க., சிறிய அளவில் முன்னிலை வகித்தது.


திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
05-மே-2021 19:58 Report Abuse
திராவிஷ கிருமி மக்களின் கல்விக்கும் நல்ல புத்திக்கும் சம்பந்தம் இல்லை...
Senthil - Bangalore,இந்தியா
05-மே-2021 19:17 Report Abuse
Senthil நகர் புறத்தில் CORONA பயத்தில் ஒட்டு பதிவு கம்மி , அதனால் DMK வந்தது , பின்னே இவங்க எதையும் அடுச்சு தூக்கவில்லை
K.P SARATHI - chennai,இந்தியா
05-மே-2021 17:42 Report Abuse
K.P  SARATHI நகர்ப்புற இந்துக்கள் செய்த தவறு மற்றும் ரஜினி தவறான முடிவு இவை இரண்டு தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டது
rmr - chennai,இந்தியா
05-மே-2021 16:36 Report Abuse
rmr சிறுபான்மையினர் என்று ஏமாத்தும் சில மதத்தினர் வாக்கு ,தொண்ணூறு சதவிகிதம் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கு தான் விழுந்துள்ளது இது எதற்கு ?அப்படி அது விழாமல் இருந்தால் இவர்கள் தோல்வி நிச்சயம் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு கேடு கேட்ட கட்சி.மோடி வேண்டாம் என்று நாடகம் வேறு . தமிழகத்தை தமிழ் ஆழ முடியாது போல
thamizh nanban - வேலூர்,இந்தியா
05-மே-2021 19:45Report Abuse
thamizh nanban1.77 கோடி வாக்காளர் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சியை 'திருடர்கள் முன்னேற்ற கழகம்' என்று சொல்லலாமா? இது அத்தனை மக்களையும் அவமதிக்கிறது அல்லவா?...
Raj - Namakkal,சவுதி அரேபியா
05-மே-2021 14:10 Report Abuse
Raj பெரும்பான்மை தமிழர்களின் தீர்பை ஏற்க மறுப்பாவார்கள், அவர்களுக்கு பாலாரும் தேனாறும் ஓடும் குஜராத், UP க்கு செல்லலாம்
Jayasheelan - Doha,கத்தார்
05-மே-2021 16:40Report Abuse
Jayasheelanமோடியை புடிக்காதவங்க இந்தியாவை விட்டு வெளிய போக சொல்லு முதல்ல, அப்புறம் நாங்க வேற ஸ்டேக்கு போறம்....
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-மே-2021 14:07 Report Abuse
S.Baliah Seer கிராமப்புறத்து மக்கள் பணம் கொடுத்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என்றும், நகர்ப்புற மக்கள் இவன் கொள்ளையடித்த பணத்தை தானே கொடுக்கிறான் என்று பணத்தை வாங்கிக் கொண்டு பிடித்தவர்களுக்கு வாக்களிக்கின்றனர் என்பதைத்தான் இது உணர்த்துகிறது.நகர்ப்புறங்களில் இனி பணம் கொடுத்து வாக்கு வாங்க முடியாது என்பதையே இது காட்டுகிறது.
Vena Suna - Coimbatore,இந்தியா
05-மே-2021 13:57 Report Abuse
Vena Suna அன்பு தம்பிகள் களப் பணிகளை சமயம் பார்த்து செய்து வெற்றிக் கனிகளை குவித்தனர்...
05-மே-2021 13:53 Report Abuse
மனுநீதி உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால், அதை நம்புகின்ற மூடர்களின் முன்னால்...நாம் கதறியென்ன, அழுதுமென்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா, ரொம்ப நாளா...என்னும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது சென்னை வாசிகளின் இந்த செயலை நினைக்கும்போது...
Gopinathan S - chennai,இந்தியா
05-மே-2021 15:04Report Abuse
Gopinathan Sஇன்னும் நல்லா கதறுங்க............
05-மே-2021 12:01 Report Abuse
தமிழன் பெரும்பாலான அரசு ஊழியன் என்றும் அலக்கையாகவே இருப்பான் என்பதை நிரூபித்துவிட்டனரோ?
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
05-மே-2021 11:52 Report Abuse
S.PALANISAMY நகர்புறங்களில் பணபலம் எடுபடவில்லை.
மேலும் 24 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)