சரத் பவார் கட்சிக்கு புது சின்னம் - தேர்தல் ஆணையம் ஒப்புதல்
மகாராஷ்ட்ராவில் சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு புதிய சின்னம் ஒன்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, சிவசேனா அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.
தற்போது சிவசேனா மற்றும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அஜித் பவாரின் முடிவால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. தேர்தல் ஆணையமும், அஜித் பவார் தலைமையிலான கட்சியே, உண்மையானது என அறிவித்தது. அக்கட்சியின் கடிகாரம் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் அளித்தது.
சரத் பவார் அணிக்கு சரத் சந்திர பவார் என்ற புதிய கட்சி பெயரை வழங்கிய தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக கொம்பு இசைக் கருவியை ஊதும் மனிதன் என்ற சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
வாசகர் கருத்து