ஆம் ஆத்மி காலை வாரிய டில்லி
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியை, டில்லி மீண்டும் காலை வாரியது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.,வே முன்னிலை பெற்றுள்ளது.
@1br@@கடந்த 2013ம் ஆண்டு முதல் டில்லியை ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதன் பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், டில்லியில் இருந்து லோக்சபாவுக்கு பிரதிநிதிகளை அனுப்புவது என்ற அக்கட்சியின் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது.
2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் அலை காரணமாக 7 தொகுதிகளிலும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. 2024 தேர்தலிலும் பா.ஜ.,விற்கு சாதகமாகவே மக்கள் ஓட்டளித்தனர்.
இந்த முறை எம்.பி.,யை அனுப்புவது என ஆம் ஆத்மி தீவிரம் காட்டியது. தேர்தலுக்கு முன்பாக, மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை அனுதாப அலையாக மாற்ற அக்கட்சியினர் முயற்சி செய்தனர். இடைக்கால ஜாமினில் வந்த கெஜ்ரிவாலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக செல்லும் இடங்களில் எல்லாம் பேசினார்.
இது வெற்றியை கொடுக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் அனைத்தும் தலைகீழாக மாறியது. இந்த முறையும் டில்லி மக்கள் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 7 தொகுதிகளிலும் அக்கட்சி முன்னிலையில் உள்ளது.
இது ஆம் ஆத்மி கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகி போய்விட்டதே என அவர்கள் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து