வாக்குச்சாவடி முதல் பாதுகாப்பு வரை! -சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ., தே.மு.தி.க., ஆம் ஆத்மி., இ.கம்யூ,. மார்க்சிஸ்ட் கம்யூ,. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
லோக்சபா தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிக்கும் கருத்துகளை தெரிவிக்க பத்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த ஆலோசனையில் இடம்பெற்றுள்ளன. இதில், தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் பாது உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
லோக்சபா தேர்தலை நடத்துவது தொடர்பாக நாளையும் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில், தென்மாநில தேர்தல் அதிகாரிகள், சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து