கூட்டணி அறிவிப்பு எப்போது? - சரத்குமார் பதில்
"எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று தான் கேட்கிறீர்கள். தனித்து நிற்க மாட்டீர்களா என்று ஏன் கேட்பதில்லை?" என, சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள தளக்காவூரில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா பிப்.,21ல் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பின், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சொந்த ஊரான தளக்காவூரில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்றதில் மகிழ்ச்சி. அனைவரும், அரசியல் ரீதியில் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக, யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறீர்கள் என்றே கேட்கிறீர்கள். தனித்து நிற்கிறீர்களா என கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
பிப்., 24ல் கும்பகோணத்தில் நடைபெறும், சமத்துவ மக்கள் கட்சி உயர்மட்ட குழுவில் லோக்சபா தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அதன்பின், லோக்சபா தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து