Advertisement

ஓட்டு எண்ணிக்கை நடைமுறை: ஊட்டியில் ஆலோசனை கூட்டம்



ஊட்டி:
ஊட்டியில் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து, முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.

லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும், 4ம் தேதி, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையின் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, முகவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் அஞ்சல் ஓட்டுகள் எண்ணும் முறை, ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்து வர வேண்டிய, எடுத்துவரக் கூடாத பொருட்கள் குறித்தும், கூட்டத்தில் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை இடமுகவர்களுக்கான கையேடுகள் (தமிழ், ஆங்கிலம்) வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்