ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்கள்; காணொலி காட்சி மூலம் கலந்தாலோசனை
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுடன் வரும் ஜூன், 1ல் காணொலி காட்சி மூலம் கலந்தாலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
இதுபற்றி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணுவதை கண்காணிப்பதற்காக, முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான காணொலி காட்சி மூலமான கலந்தாலோசனை கூட்டம் ஜூன், 1 காலை, 9:00 மணிக்கு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்துக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி உட்பட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள முகவர்களுக்கு தனியாக பெயர் போடப்பட்ட இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அவரவர்களுக்கான இருக்கையில் அமர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து