ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரி, செட்டிக்கரையில் உள்ள லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார்.
தர்மபுரியில், லோக்சபா தேர்தல் கடந்த ஏப்., 19 ல் நடந்தது. இதன் ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. இதை நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். இதில், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஓட்டு எண்ணும் மையத்தில், 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, தபால் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மையத்தில், மின் வசதி, மின் விளக்குகள், பேன், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து