'அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஐஸ்'
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், நேற்று மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரத்தில் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான திட்டங்களை நிறைவேற்றுவேன் என பேசி வருகிறார். தேர்தல் வந்துவிட்டால் அவருக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஞாபகம் வந்து விடும். ஆசிரியர்கள் உண்ணாவிரதம், போராட்டம் நடத்திய போது, முதல்வர் ஒரு தடவை கூட சென்று அவர்களை பார்க்கவில்லை.
ஏன் இப்போது பேசுகிறார் என்றால், வாக்குச்சாவடியில் அமருவது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்பதால், அவர்களுக்கு முதல்வர் ஐஸ் வைக்கிறார். ஆனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தெளிவாக உள்ளனர். தேர்தல் நேரத்தில் ஒரு வாக்குறுதி, தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைப்பாடு, இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
சொத்து, மின்சாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு. எங்கு பார்த்தாலும் கஞ்சா புழக்கம். டெல்டாவில் இன்று விவசாயம் செய்ய முடியாமல்கஷ்டப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து