பார்த்துக்கலாம் பண்ணிக்கலாம்

வடசென்னையில் அ.தி.மு.க., வேட்பாளராக ராயபுரம் மனோ, தேர்தல் களத்தில் உள்ளார். அவர், வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் பிரசாரம் செய்து வருகிறார்.
இவர், ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம், வாக்காளர்கள் கூறும் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டாலும், அதற்கு தீர்க்கமான பதில் சொல்வதில்லை.
எந்த கோரிக்கையாக இருந்தாலும், 'பார்த்துக்கலாம், பண்ணிக்கலாம், செஞ்சிக்கலாம்' என, நழுவும் வகையான பதில்களே, ராயபுரம் மனோ சொல்லி வருகிறார்.
இதனால் அதிருப்தியடையும் அ.தி.மு.க.,வினர், 'செய்கிறோமோ இல்லையோ, தரும் வாக்குறுதியை உறுதிபட தெரிவித்தால் தான்,மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். இவர் சொல்லும்போதே ஏனோதானோ என சொல்வதால், போகுமிடமெல்லாம் பொதுமக்கள் எங்களிடம் அலுத்து கொள்கின்றனர்' என, புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து