இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட பினராயி
கேரள மாநிலம் கோட்டயம் லோக்சபா தொகுதியில் கேரள காங்., மாணி கட்சி சார்பில் தாமஸ் சாழிக்காடன் போட்டியிடுகிறார். இந்த கட்சியின் சின்னம் இரட்டை இலை. கோட்டயம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு, முதல்வர் பினராயி விஜயன் பேச துவங்கினார்.
''வரும் லோக்சபா தேர்தலின் முக்கியத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அதுதான் இந்த தேர்தலின் மிகப்பெரிய தனித்துவம்'' என்று பேசிக்கொண்டே மைக்கை கையால் உயர்த்தி வைக்க முயன்ற போது, மைக் மொத்தமாக உடைந்து அவரது இடது பக்கம் சரிந்தது.
அதை அவரே எடுத்து சரிசெய்ய முயன்றும் முடியாமல் போனதால், மேடையில் இருந்தோர் ஓடிச் சென்று அதை வாங்கி சரி செய்ய முயன்றனர். முதல்வரின் முகத்தில் டென்ஷன் தெரிந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் புன்சிரிப்புடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார். பத்து நிமிடத்துக்கு பின்னர் வேறு மைக் பொருத்தப்பட்டு தொடர்ந்து பேசினார்.
தமிழ்நாட்டில் ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் பேசும் போது இப்படி நடந்திருந்தால் பாவம்...எத்தனையோ பேர் பாடாய்பட்டிருப்பர். கேரள அரசியல் ஸ்டைலே தனிதான்.
வாசகர் கருத்து