நாட்டில் அநீதியின் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி
"மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும்" என, காங்கிரஸ் எம்.பி., சோனியா காந்தி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ., தங்கள் கட்சியில் சேர வேண்டும் எனக் கூறி மிரட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இன்று ஆபத்தில் இருக்கிறது.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ., சதி செய்கிறது. நாடு முழுவதும் இன்று அநீதியின் இருள் சூழ்ந்துள்ளது. நீதியை காக்க நாம் அனைவரும் பா.ஜ., வுக்கு எதிராக போராட வேண்டும்.
மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும்.
பிரதமர் மோடி தன்னைப் பெரியவராக நினைத்துக் கொண்டு கண்ணியத்தை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய நாடு என்பது ஒரு சிலரின் சொத்து கிடையாது, அவை அனைவருக்கும் பொதுவானது. இதற்காக பலர் ரத்தம் சிந்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து