நாட்டில் 3 பிரச்னைகள் இருக்கின்றன : ராகுல் பேச்சு
"வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகளுக்கான அநீதி என நாட்டில் மூன்று பிரச்னைகள் இருக்கின்றன" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் சந்த்வாட் பகுதியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பின், அவர் பேசியதாவது:
விவசாயிகளால் நாடு வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ப்படும்.
மேலும், விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காங்கிரசில் விவசாயிகளுக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 70,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை.
வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகளுக்கான அநீதி என நாட்டில் மூன்று பிரச்னைகள் இருக்கின்றன. நாட்டில் நடக்கும் எந்த பிரச்னையிலும் மோடி கவனம் செலுத்துவது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து