தொண்டருக்கு அடி அமைச்சர் கோபம்
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு தி.மு.க., கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரசாரம் நடந்தது. பிரசார வேனில் வேட்பாளருடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது, தொண்டர் ஒருவர் பிரசார வேனின் மீது ஏறி வேட்பாளருக்கு மாலை அணிவிக்க முயன்றார். திடீரென ஆத்திரமடைந்த ராஜகண்ணப்பன், இளைஞரின் முதுகில் அடித்து, 'கீழே இறங்குப்பா' என்றார்.
இச்சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் அடித்த வீடியோ, பரவி வருகிறது.
வாசகர் கருத்து