Advertisement

தபால் ஓட்டுக்கு பரிசு பண மழை

சேலம் மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 5,711 வாக்காளர்கள்; மாற்றுத்திறனாளிகள், 3,691 பேர் என மொத்தம், 9,402 பேருக்கு தபால் ஓட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த பட்டியலின் அடிப்படையில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு, ஓமலுார், இடைப்பாடி, வீரபாண்டி சட்டசபை தொகுதிகளில் உள்ள தபால் ஓட்டுகளுக்கு தி.மு.க., 1,000 ரூபாயும், அ.தி.மு.க. 500 ரூபாயும் வழங்கினர். பா.ம.க.,வினர் பிரசாரத்துடன் முடித்துக் கொண்டனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி பிரதான கட்சிகள் தங்களின் கடைசி ஆயுதமான கவனிப்பை கையில் எடுத்து இருப்பது, நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் பிற வாக்காளர்கள், தேர்தல் நேரத்தில் தங்களுக்கும் பணப்பரிசு வந்து சேரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்