பா.ஜ., அரசின் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

"சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் வசூலித்துள்ளனர்" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., அரசை விமர்சித்துள்ளார்.

மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன. சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் வசூலித்துள்ளனர்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பொய் பேசுகிறார், பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Barakat Ali - Medan, இந்தோனேசியா
05-ஏப்-2024 11:42 Report Abuse
Barakat Ali \ சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் வசூலித்துள்ளனர். //// திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே பொதுத்துறை வங்கிகளில் இதுதான் நியதி ..... ஸ்டாலினுக்கு எழுதிக்கொடுத்த அறிவாளி கூட அரைகுறைதான் போலும் .....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்