ராமன் பெயரால் ஓட்டு அப்துல்லா மீது புகார்
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பா.ஜ., சார்பில் பிரபல மலையாள நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, கம்யூ., கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கேரள அமைச்சர் சுனில் குமாரும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் வடகரை தொகுதி தற்போதைய எம்.பி.,யான கே.முரளீதரனும் போட்டியிடுகின்றனர்.
இங்கு, சுரேஷ் கோபிக்கு ஆதரவாக பா.ஜ., தேசிய துணைத் தலைவரான அப்துல்லா குட்டி பிரசாரம் செய்தார். இரிஞ்ஞாலக்குடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், 'ராமனின் பெயரை கூறி ஓட்டு சேகரித்ததாக மா.கம்யூ., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'ராமனின் பெயரை மனதில் தியானம் செய்து, அனைவரும் சுரேஷ் கோபிக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்று அப்துல்லா குட்டி கூறியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லா குட்டி, இரண்டு முறை மா.கம்யூ., - எம்.பி.,யாக இருந்தவர். பின் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். சில ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வில் சேர்ந்த இவருக்கு தேசிய துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து