தேர்தல் நேரத்தில் ஆன்மிகவாதியான ராஜா
குன்னுாரில் நடந்த பொது கூட்டத்தில், நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா ஆன்மிகம் பற்றி பேசியது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வேட்பாளர் ராஜா பேசியதாவது:
என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது.
நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.
கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. கும்பிட்டுவிட்டு போ.
இவ்வாறு ராஜா பேசினார்.
அங்கிருந்த எதிர்க்கட்சியினர் கூறுகையில், 'இதுவரை ஹிந்து கடவுள்களை கேவலமாக பேசிய ராஜா, தேர்தல் நேரத்தில் மட்டும், கோத்தகிரி பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தியும், ஹிந்துக்கள் ஓட்டுக்காக ஆன்மிகத்தை ஆதரித்தும் பேசி வருகிறார். இது சந்தர்ப்பவாத அரசியல்' என்றனர்.
வாசகர் கருத்து