'பூச்சி' தொல்லை தாங்க முடியலீங்க! கொஞ்சமாவது மரியாதை வேணுமுங்க

வயதில் சிறியவர்களையும் வாங்க... போங்க என அழைப்பது, கொங்கு மண்டலம். இங்கு மூத்தவர்களையும், ஒருமையில் தொகுதி பொறுப்பாளர் வெளுத்து வாங்குவதால், 'இந்த பூச்சி தொல்லை தாங்கல' என, உடுமலை, மடத்துக்குளம் தொகுதி தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பொறுப்பாளராக, தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரான 'பூச்சி' முருகனை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.

உடுமலையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே கட்சியினரை, ஒருமையில், திட்டி பேசியதால், உள்ளூர் பொறுப்பாளர்கள் வேதனை அடைந்தனர்.

தற்போது, பூத் கமிட்டி கூட்டங்களுக்கு செல்லும் பூச்சி முருகன், கட்சி கிளை, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளை, சென்னை வட்டார வழக்கில் ஒருமையில் திட்டி தீர்ப்பதால், கட்சியினர், வெளியில் சொல்ல முடியாமல் குமுறுகின்றனர்.

'வயசுல சின்னவங்களை கூட வாங்க, போங்கன்னு பேசற நம்ம ஏரியா வுல, இப்படி ஒருமையில பேசுனா எப்படிங்க; எலக் ஷனுக்கு முன்னாடி ஒருத்தரும் எட்டி பார்க்கிறதில்லைங்க; வருமானத்துக்கும் வழியில்லீங்க; இப்ப மட்டும் வந்து, அதை செய்யுங்க, இதை செய்யுங்க, அப்படின்னு மிரட்டுனா நாங்க என்னங்க பண்ணுவோம்; மரியாதை ரொம்ப முக்கியமுங்க; இந்த பூச்சி தொல்லைக்கு ஒரு தீர்வு இல்லையா' என உடுமலை, மடத்துக்குளம் வட்டார தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)