கருணாநிதி பரம்பரையை ஒழிக்க முடியவில்லை: செல்லூர் ராஜூ ஆதங்கம்
"மன்னர் பரம்பரையை ஒழித்துவிட்டோம். கருணாநிதி குடும்ப பரம்பரையை ஒழிக்க முடியவில்லை" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
மதுரையில் அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் செல்லுார் ராஜூ பேசியதாவது:
நாங்கள் போருக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். எவ்வாறு எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றிப் பேசாமல் யாரும் கட்சியை நடத்த முடியாது.
நாட்டை நேசிக்கக்கூடிய அரசியல் இயக்கம் என்பது ஒரு மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. ஒரே கொள்கை மற்றும் சித்தாந்தத்தை கொண்ட விஜயகாந்தின் எண்ணமும் அது தான்.
நாட்டை காக்கும் மற்றொறு சுதந்திர போராட்டமாக இந்த தேர்தல் இருக்கப் போகிறது. சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள், தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். அது தான் பா.ஜ.,
அவர்கள் பேசும் போது மட்டும் பெருமையாக பேசுவார்கள், அது கானல் நீர். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் என்ன பேசுகிறோம் என்பதையே தெரியாத கத்துக்குட்டி ஒருவர் தலைவர் ஆனார். சமூக வலைதளம் வாயிலாகவே மக்களை மாற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துவிட்டது. வரும் நாட்களில் நடந்தால் கூட ஜி.எஸ்.டி., போடுவார்கள் போல. நமக்கு எதிரி தி.மு.க, தான் மன்னர் பரம்பரையை ஒழித்துவிட்டோம். கருணாநிதி குடும்ப பரம்பரையை ஒழிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து