குடிமகன் வாகனத்திற்கு தனி 'நம்பர் பிளேட்' - வேட்பாளர் குரல்
அரசுக்கு வருமானம் தரும், குடிமகனின் வாகனத்திற்கு, சிவப்பு நிறத்தில் தனி 'நம்பர் பிளேட்' வேண்டும் என்று லோக்சபாவில் குரல் கொடுப்போம் என, மத்திய சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர் பேசினர்.
மத்திய சென்னை தொகுதியில், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் ஆதரவில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் நாகராஜ் என்பவர், ஊழலை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், பூஜ்யம் மதிப்பில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து, மனு தாக்கல் செய்ய வந்தார்.
பின், நாளை வருவதாக கூறி சென்றனர்.
வேட்பாளர் நாகராஜ் அளித்த பேட்டி:
மது குடிப்போர் சங்கத்தின் ஆதரவில் மத்திய சென்னையில் போட்டியிடுகிறேன். மாநிலத்தில் மது குடிருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
பா.ஜ., போன்றவர் பக்தி பிரிவினர், தி.மு.க., போன்றவர்கள் பகுத்தறிவு பிரியர்கள், நாங்கள் பாட்டில் பிரியர்கள். 'பார்' வீரர்களாக தேர்தலில் களமிறங்குவோம்.
வெற்றி பெற்றால், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மையம் திறப்போம். அரசுக்கு வருமானம் தரும் எங்களை போன்ற குடிமகனின் வாகனங்களை போலீசார் பிடிக்காத வகையில், சிவப்பு நிறத்தில் தனி 'நம்பர் பிளேட்' உருவாக்க வேண்டும். இப்படி கோரிக்கை நிறைய உள்ளது. எல்லாவற்றுக்கும் லோக்சபாவில் குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து