குமரி தேர்தல் களத்தில் 'டாரஸ் கொலைகள்'
கன்னியாகுமரியில் தேர்தல் களம் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. ஓட்டுகளுக்காக ஓட்டு யுத்தமும் தொடங்கி விட்டது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில், 'கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கு வீடு கட்ட கல்லும் மண்ணும் இல்லை. வரிசை வரிசையாக செல்லும் டாரஸ் லாரிகளால் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஒரு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சிலரது பினாமி டாரசும் உள்ளது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தான் பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் , 'மத்திய அரசின் அனுமதியுடன்தான் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளம் கொண்டு செல்ல வேண்டுமெனில், மத்திய அரசு அனுமதி வேண்டும் என்ற அடிப்படை கூட பொன். ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை.
கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கும், டாரஸ் லாரிகளின் விபத்தில் ஏற்பட்ட மரணத்தை, கொலை என்று கூறி அதற்கு நான்தான் பொறுப்பு என்கிறார். மோடியை போல பொன். ராதாகிருஷ்ணனும் பொய் பேசுகிறார்' என்றார்.
வாசகர் கருத்து