Advertisement

சொந்த செலவில் பிரசாரம் கமலுக்கு தி.மு.க., நெருக்கடி

வரும் தேர்தலில், 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் செய்ய ஆகும் செலவை, அவரே பார்த்துக் கொள்ளட்டும் என தி.மு.க., தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இண்டியா கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி., பெற்றுக் கொள்வதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாகவும் கமல் ஒப்பந்தம் செய்துள்ளார்.

வழக்கமாக வெளியூரில் இருந்து பிரபலங்கள் பிரசாரம் செய்ய வந்தால் தங்குவது, பிரசார வாகனம் உட்பட அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் லோக்கல் கட்சி நிர்வாகிகள் பார்த்துக் கொள்வர்.

ஆனால், தி.மு.க., தலைமையோ பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் தரப்பிலிருந்து கூட்டத்தை மட்டும் கூட்டி விடுகிறோம் என கமலிடம் தெரிவித்துள்ளனராம். இதனால், கமல் தரப்பில் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்