அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒரே கூட்டணி: சொல்கிறார் தயாநிதி மாறன்
"பொது சிவில் சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க, இப்போது நாடகமாடுகிறது" என மத்திய சென்னை தி.மு.க., வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
தயாநிதி மாறன் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பல சவால்களை சந்தித்து உள்ளனர். 2019ம் ஆண்டு மிகப் பெரிய தண்ணிர் பஞ்சம் ஏற்பட்டது. அன்றைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் தான் தண்ணீர் விநியோகம் செய்தோம்.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் 80 சதவீத குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்திருக்கிறோம். மத்திய அரசு நிதி ஓதுக்காமலயே இரண்டாம்கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிளை தமிழக அரசு துவக்கி உள்ளது.
இது முடிந்தால் போக்குவரத்து பிரச்னை தீர்ந்துவிடும். எங்களை பொருத்தவரை பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றனர்.
சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக அ.தி.மு.க., நடிக்கிறது. பொது சிவில் சட்டம், வேளாண் சட்டங்கள் போன்றவற்றுக்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது. ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால் நாடகம் ஆடுகிறது.
தமிழகத்திற்கு துரோகங்களை செய்தவர் மோடி. அவர் அடிக்கடி தமிழகம் வருகிறார். வெள்ளம் வந்தபோது, அவர் ஒரு ரூபாய் கூட தரவில்லை. துாத்துக்குடிக்கு சென்றபோதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்கவில்லை.
தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் தமிழை வளர்ப்பேன் என பொய் சொல்கிறார், அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு தயாநிதி கூறினார்.
வாசகர் கருத்து