Advertisement

ஜெ.,வை எதிர்த்த சிம்லாவுக்கு சீட் : அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ஹைலைட்ஸ்

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடக் கூடிய 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதில், தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகளும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிடக் கூடிய 16 வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன், வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ, மதுரை வேட்பாளர் சரவணன் ஆகியோர் மட்டுமே மக்களுக்கு அறிந்த முகங்களாக இருந்தன.

அ.தி.மு.க., வேட்பாளர்களில் 13 புதுமுகங்களுக்கு பழனிசாமி வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்நிலையில், 2வது வேட்பாளர் பட்டியலை இன்று அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது.

யார் யாருக்கு வாய்ப்பு?

கோவை - சிங்கை ராமச்சந்திரன், திருச்சி - கருப்பையா, பெரம்பலூர் - சந்திரமோகன், மயிலாடுதுறை - பாபு, ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார், தருமபுரி - அசோகன், திருப்பூர் - அருணாச்சலம், நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன், வேலூர் - பசுபதி, திருவண்ணாமலை -கலியபெருமாள், கள்ளக்குறிச்சி - குமரகுரு, சிவகங்கை - சேகர் தாஸ், நெல்லை - சிம்லா முத்துச்சோழன், புதுச்சேரி - தமிழ்வேந்தன், தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி, கன்னியாகுமரி - பசிலியா நசரேத், விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணிபுதுச்சேரி தமிழ்வேந்தன்

-இதில் அ.தி.மு.க.,வின் ஐ.டி., விங் செயலராக இருக்கும் சிங்கை ராமச்சந்திரன், கோவை தொகுதியில் போட்டியிட உள்ளார். தி.மு.க.,வில் இருந்து விலகி சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்த சிம்லா முத்துச்சோழன், நெல்லையில் போட்டியிட உள்ளார். முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், நீலகிரியில் போட்டியிட உள்ளார்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக ராணி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் 18 இடங்களில் நேரடியாக மோத உள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்