பா.ஜ., அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்பார்
புதுடில்லி: லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. உ.பி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.,வை விட இண்டியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. ஆனால் மெஜாராட்டியை விட, பா.ஜ., 300க்கு மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்த கட்ட நடவடிக்கையில் பிரதமர் மோடி களத்தில் இறங்கி உள்ளார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து 3முறையாக ஆட்சி கட்டிலில் அமர வைக்க பா.ஜ., வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இண்டியா கூட்டணியினர் ஆலோசனை
இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று மாலை டில்லியில் ஒன்றுக் கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கூட்டணி கட்சியினர் விவாதிக்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து