2 சிட்டிங் தொகுதிகளை இழந்த காங்கிரஸ்: திருச்சியில் ம.தி.மு.க., போட்டி
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், திருச்சி தொகுதியில் ம.தி.மு.க., போட்டியிட உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க, வி.சி., இ.கம்யூ, மா.கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியானது. தி.மு.க., காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகவிவ்லை.
லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தொகுதிகள் எவை என்ற தகவல் இன்று வெளியாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. புதிதாக, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள்
தொகுதி ஒதுக்கீடுகளின்படி, தி.மு.க., போட்டியிடும் 21 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட உள்ளது.
வாசகர் கருத்து