லோக்சபாவுடன் 4 மாநில தேர்தல்: நாளை மதியம் தேதி அறிவிப்பு
லோக்சபா தேர்தல் அட்டவணை மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை நாளை மதியம் (மார்ச் 16) வெளியிட உள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லோக்சபாவின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. நாடு முழுவதும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வந்தது.
முன்னதாக, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான கள ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. சில நாள்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் ஆய்வை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அங்கு தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், லோக்சபா தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில், புதிய தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோர், இன்று டில்லியில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்பின், லோக்சபா தேர்தல் அட்டவணை மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையும் நாளை மதியம் 3 மணியளவில் வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளன.
வாசகர் கருத்து