புயல் கிளப்பிய போக்சோ வழக்கு: எடியூரப்பாவின் பதில் என்ன?
கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள சதாசிவ நகர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்க சென்ற தன்னுடன் வந்த 17 வயது மகளுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தார்' என குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக எடியூரப்பா கூறுகையில், "தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதி உதவி அளித்தேன். மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்டு வந்தாலும் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. அவர், மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது" என்றார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு, கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
வாசகர் கருத்து