Advertisement

தேர்தல் பத்திரங்கள்: தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுளளது.

கடந்த 2017ல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.

இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டு வந்தது.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறை செல்லாது என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இது குறித்த தகவல்களை, தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அதன் விபரங்களை, மார்ச், 15ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை தேர்தல் கமிஷனிடம் வழங்கியது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்