பழனிசாமி, அண்ணாமலை மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு
போதைப்பொருள் கடத்தலில் தன்னை அவதூறு செய்வதாக கூறி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 8ல் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, இந்த விவகாரத்தில் என்னையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
இதே விவகாரம் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் என்னை தொடர்புபடுத்தி பதிவிட்டிருந்தார். தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து