மோடிக்கு கொலை மிரட்டல்: டில்லியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்கு

பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த புகாரில், தமிழக அமைச்சர் தா.மோ.அன்பசரன் மீது டெல்லி காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பம்மலில் சில நாள்களுக்கு முன்பு நடந்த விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க.,வை அழித்துவிடுவேன் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். எவ்வளவோ பிரதமரை பார்த்துள்ளோம். இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை. தி.மு.க., என்பது சாதாரண இயக்கம் இல்லை.

பல உயிர்த் தியாகங்களால் வளர்ந்த இயக்கம். வரலாற்றில் தி.மு.க.,வை ஒழிப்பதற்காக கிளம்பியவர்கள் தான் ஒழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க., எப்போதும் கம்பீரமாக நிற்கும். அமைச்சர் என்பதால் நான் அடக்கி வாசிக்கிறேன். இல்லையென்றால் பீஸ், பீஸாக ஆக்கிவிடுவேன்' என மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறையில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்று, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 268, 503, 505, 506 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்