விளவங்கோடு தொகுதி பெண் வேட்பாளர் யார்?

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி, சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தார்.

அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக விஜயதரணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலிலும் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பை, சமீபத்தில் அத்தொகுதியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

இதையடுத்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வதனா நிஷா, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி சர்மிளா ஏஞ்சல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோர் சீட்டு கேட்டு, மேலிட தலைவர்களிடம் காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்த தொகுதியில் ஹிந்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது கிறிஸ்துவ பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்