தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷனர் அட்வைஸ்
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் நாட்டில் மாநில வாரியாக தேர்தல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் பேசியதாவது:
தேர்தல் நடக்கும் இடத்தில் உள்ள பார்வையாளர்கள் கண்டிப்பாகவும் அசம்பாவிதங்கள் நடக்காமலும் மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் குறித்த சந்தேகங்களோ, வேட்பாளர் குறித்த புகார்கள் என எது வந்தாலும் மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும்.
வாக்களிக்கும் நாளில் வயது முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஏதேனும் முக்கிய நிகழ்வு ஏற்பட்டாலும் உடனடியாக தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து