அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தேவையில்லை தென்காசி
தென் மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான தென்காசி -- தனி லோக்சபா தொகுதியில், இம்முறை தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி இல்லாமல் இ.கம்யூ., புதிய தமிழகம், பா.ஜ., கட்சிகள் மோதும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தனுஷ்குமார் முதல் முறையாக வெற்றி பெற்றார். தற்போது, பா.ஜ., சார்பில் வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட இருப்பதாக தகவல் பரவுகிறது.
தி.மு.க.,வில், கட்சியே போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இது குறித்து கட்சித் தலைமை எடுத்த சர்வேயில் திருப்தி இல்லை. அதனால், இ.கம்யூ.,க்கு தென்காசியை தள்ளிவிட தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது.
அ.தி.மு.க., சார்பில் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடலாம் என கட்சியினர் கூறுகின்றனர். இவ்வாறு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதுவதை தவிர்த்து, தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தென்காசி தொகுதியை வழங்கும் பட்சத்தில், இங்கு தேர்தல் கள வெற்றி வியூகமும் மாற வாய்ப்புள்ளது.
வாசகர் கருத்து