சர்ச்சை பேச்சு மகனுக்கு எச்சரிக்கை
முரசு கொட்டி கிளம்பிய நடிகரின் மூத்த மகன் பேச்சு, ரொம்பவும் அதிரடியாக இருப்பதாக பல தரப்பிலிருந்தும், கட்சியின் பொருளாளரான தாய்க்கு தகவல் போனதாம். 'மேடைப் பேச்சில் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது' என, எச்சரித்துள்ளாராம்.
'மாபியா' நிதி வாங்க மறுப்பு
தென் தமிழகத்தில் இருக்கும் மணல், 'மாபியா'க்கள், வழக்கமாக தேர்தல் என்றால், எல்லா கட்சியினருக்கும் நிதி வழங்குவது வாடிக்கை. முருகன் கோவில் ஊரில் போட்டியிடும் பெண் பெயரை இணைத்திருக்கும் சூரிய கட்சி நபர், அந்த நிதியை வாங்க மறுத்து விட்டாராம்.-பிரசாரத்துக்கு செல்ல மகனுக்கு அப்பா தடை
வட மாவட்டத்தில், தொழில் துறை நிர்வாகத்துக்கு தலைவராக இருந்த இலை கட்சி பிரமுகரின் மகன், தேர்தல் களத்தில் எதிரிகளை சம்பாதிப்பதாக மேலிடத்துக்கு தகவல் போனதாம். இதையடுத்து, அவரை பிரசாரத்துக்கு செல்ல அப்பா தடை போட்டிருக்கிறாராம்.-- பதவிகளுக்கு 'ரேட்' வேட்பாளர் கண்ணீர்
துாங்காநகரின் வடக்கு பார்த்த தொகுதியில், தாமரை மற்றும் சூரிய கட்சி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி. தாமரை வேட்பாளர் பண பலத்தால், சூரிய கட்சி நிர்வாகிகளை, 'சைலன்ட்'ஆக விலை பேசி இழுக்குறாராம். விஷயம் தெரிந்த சூரிய கட்சி வேட்பாளர், கட்சி தலைமையிடம் சொல்லி, கண்ணீர் விட்டு அழுதாராம்.
வாசகர் கருத்து