மயானக் கொள்ளைக்கு போஸ்டர்: த.வெ.க.,வின் அதிரடி

திண்டுக்கல் மாவட்டத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாழ்த்து போஸ்டர்களை தொண்டர்கள் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டர்களில், 'நாளைய முதல்வரே, நம்பிக்கை நாயகரே, விடிவெள்ளியே' என்ற புகழுரைகள் இடம் பெற்றுள்ளன.
சேலத்தில் த.வெ.க., சார்பில், மயானக் கொள்ளை நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களை வரவேற்று, பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், அம்மன் உருவம் மட்டும் இடம் பெற்றுள்ளது; நிர்வாகிகள் பெயரோ, பொறுப்போ இல்லை.
இது குறித்து விஜய் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
டிரைலர் வெளியீடு, ஆடியோ வெளியீடு விழாக்களில் அரங்கம் சேதம், சினிமா முதல் காட்சியில் தியேட்டருக்கு சேதம் என பல்வேறு சம்பவங்களால், விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்ற கெட்ட பெயர் பரவி விட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தாலும், கட்சியில் பதவியை பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்திலும், இதுபோன்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கட்சித் தலைமை இதை எல்லாம் கட்டுப்படுத்தினால் நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து