'கான்ட்ராக்ட் தர மாட்றாங்களே' தி.மு.க.,வினர் புலம்பல்

திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடத்தில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க., கட்சி பொதுக்கூட்டத்தில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், அக்கட்சி விழுப்புரம் மாவட்ட செயலருமான சண்முகம் பேசியதாவது:
தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின், வரிகள், கட்டணங்களை உயர்த்த மாட்டேன்: பால் விலை, மின்கட்டணம் குறைப்பேன் என்று, தேர்தல் வாக்குறுதி அளித்தார். 10 ஆண்டுகளாக காய்ந்து கிடந்த அவர்கள் வென்றால், வேட்டி, மூக்குத்தியை உருவியே விடுவர் என்று எச்சரித்தோம்.
அதையும் மீறி ஓட்டுப் போட்டீர்கள். அனைத்தையும் உயர்த்திவிட்டார்.
இப்போது நலமாக இருக்கிறீர்களா, அரிசி, 1,000 ரூபாய் கிடைக்கிறதா என கேட்கிறார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்பங்கள் நன்றாக உள்ளன. அக்கட்சியினர் குடும்பங்கள்தான் நன்றாக இல்லை. 'உங்கள் ஆட்சியே தொடர்ந்து நடந்திருக்கலாம்; எடப்பாடியாரே முதல்வராக இருந்திருக்கலாம். 10 கான்ட்ராக்ட்டுகளில், நான்கையாவது எங்களுக்கு கொடுப்பீர்கள். இப்போது எந்த வேலையுமே கொடுப்பதில்லை.
எல்லாம் ஒருவழிப்பாதை. எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்கள் ஆட்சியே இருந்திருக்கலாம்; மீண்டும் உங்கள் ஆட்சியேதான்' என்று கூறுகின்றனர். துாங்க முடியாத முதல்வர், மற்றவர்களை நலமா என்று கேட்கிறார். தமிழகமே போதை மாநிலமாக மாறிவிட்டது. 39 எம்.பி.,க்கள் இருந்தும் என்ன செய்தார்கள்? ஒன்றுமே இல்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர் கருத்து