சிட்டிங் எம்.பி.,க்கு அறிமுக விழா!

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு எம்.பி.,ஆன நவாஸ் கனி, ஐந்தாண்டுகளாகியும் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றவில்லை. அவ்வப்போது தொகுதி நிதியில் திட்டத்தை துவக்கி வைத்து செல்வதோடு சரி என, தி.மு.,க.,வினரே புலம்பி தீர்ப்பர்.

தற்போது மீண்டும் நவாஸ் கனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டதுமே தொண்டர்கள் கடும் விரக்தி அடைந்து விட்டனர். எனினும் ராமேஸ்வரம் அருகே பாம்பனில், 'தடபுடல்' வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த தி.மு.க., மூத்த தொண்டர்கள் சிலர், 'ஏம்பா புது வேட்பாளரை கொண்டு வந்து அறிமுகப்படுத்துவீங்கன்னு பார்த்தா ஏற்கனவே ஜெயிச்சவரை தான் கூட்டி வந்தீங்களா? இதுக்கு எதுக்கு அறிமுக விழா கூட்டம்?' எனக் கூறி கூட்டத்தில் சிரிப்பலையைஏற்படுத்தினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்