'மத்திய அரசின் காதை திருகி கேளுங்கள்'

''தமிழகத்திற்கு வேண்டியதை கேட்க, மத்திய அரசின் காதுகளை திருக வேண்டிய நேரம் தான், இந்த தேர்தல்,'' என, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசினார்

சென்னை அம்பத்துாரில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் பங்கேற்ற, திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் பேசியதாவது:

நாம் பல்வேறு வகைகளில், வரியாக 1 ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு, 29 பைசாவை தான் நிதி உதவியாக திருப்பி கொடுக்கிறது.

அவர்களது காதை திருகி, நமக்கு உரியதை கேட்க வேண்டிய நேரம்தான், இந்த தேர்தல். அதனால், அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு, அவர்களின் காதை திருகி, தமிழகத்திற்கு வேண்டியதை கேட்க வேண்டும்.

தமிழகத்தின் நலத்திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு, மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. ஆனாலும், மாநில அரசு, அதற்கான நிதியை கொடுத்து கொண்டுதான் உள்ளது என, தமிழக முதல்வர் கூறி வருகிறார்.

அதை விட, தமிழகத்தில் நேர்ந்த பேரிடர் காலத்தில், மக்கள் பரிதவித்தபோது கூட உதவாமல், பல்லைக்காட்டும், மத்திய அரசு எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் செலுத்தும் வரிக்கான தொகையை, எங்களுக்கு திரும்ப வழங்கினால் போதும். எங்கள் முதல்வரே எங்களை நலமாக பார்த்துக்கொள்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.


panneer selvam - Dubai, ஐக்கிய அரபு நாடுகள்
09-மார்-2024 20:05 Report Abuse
panneer selvam The problem with Stalin ji is that Modi ji is demanding expiture accounts of the money spent on various projects in Tamilnadu . As per Dravidian model , 40% of project cost has to be spent as commission to local Dravidian authorities and corruption to government officials. We know what happened to 4,000 crores spent on Chennai flood mitigation projects last year. So hard luck to Stalin ji . Let him continue with heroic dialogue and empty challenges coated with Tamil sentiments
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)