தொ.மு.ச.,வில் பூசல் தேர்தல் பணியில் சிக்கல்
தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வின் கோவை மண்டலத்தில் நிலவும் உச்சகட்ட பூசல், லோக்சபா தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து தொ.மு.ச., உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல தொ.மு.ச., பேரவையில், பூசல் உச்சகட்டத்தில் உள்ளது. ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பது, விதிகளை மீறி ஒருவர் இரு பதவிகள் வகிப்பது, பதவியைத் தக்க வைக்க உறுப்பினர்களை 'டிரான்ஸ்பர்' செய்வது, மற்றும் பணியில் முறையாக பஸ் ஒதுக்காதது எனப் பல பிரச்னைகள் நிலவுகின்றன. இதனால், கோவை மண்டலத்தில் தொ.மு.ச., உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கோவையில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். நிர்வாகிகள் பலரும் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சக உறுப்பினர்களை அரசியல் ஆதாயத்துக்காக பழிவாங்குகின்றனர். மாநிலம் முழுதும் இதே நிலைதான். இப்படியே நிலைமை நீடித்தால், தேர்தல் பணிகள் பாதிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து