தாமரையிடம் திரும்பும் பட்டாசு
விருதுநகரின் தற்போதைய எம்.பி., காங்.,கைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர். கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, 'பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பாக இருப்போம். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும் சரவெடி தயாரிக்கவும் அனுமதி பெற்றுத் தருவேன்' என வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் அதன்பின் ஒருமுறை கூட பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்துப் பேசவே இல்லை. பட்டாசு தயாரிப்பு தொடர்பான கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதனால் பட்டாசு தயாரிப்புத் துறையினர் மாணிக்கம் தாகூர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதேசமயம், தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பட்டாசு ஆலை உரிமையாளர்களை அடிக்கடி நேரில் சந்தித்து, அவர்களை மத்திய அமைச்சர்களிடம் அழைத்து சென்று பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தற்போது பட்டாசு நகரம், தாமரை பக்கம் திரும்பியுள்ளது.
வாசகர் கருத்து