லோக்சபா தேர்தல்: 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்

லோக்சபா தேர்தலையொட்டி முதல்கட்டமாக ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் தேர்தல் வாக்குறுதிகளை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவிப்பதற்குரிய முதல் கட்ட ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்வதற்கான உத்திகளை அக் கட்சி தலைமை வகுத்துள்ளது.
பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகள், மக்களுக்காக பிரதமர் மோடி ஏற்படுத்திய திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
அரசு சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கவும் பா.ஜ., மேலிடம் வலியுறுத்தியுள்ளது.
இண்டியா கூட்டணியில் இன்னும் மாநில வாரியாக தொகுதி பங்கீடு, கூட்டணி உடன்பாடு போன்றவை முடிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வும் எம்.பி., ராகுல் காந்தியும் தேர்தல் வாக்குறுதியின் முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் விபரம்:
*நாட்டில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களில் 90 சதவீதம் நிரப்பப்படும்.
* 100 நாள் வேலை திட்டத்தை போல, படித்த இளைஞர்களுக்கென திட்டம் கொண்டுவரப்படும். பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில்பயிற்சியுடன் 1 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
* தேர்வுதாள் கசிவு நடக்காமல் இருக்க சட்டம் கொண்டுவரப்படும், அரசு தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும்.
* சிறுகுறு தொழிலை துவங்க ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கு 5000 கோடி ரூபாயில் ஸ்டார்ட் அப் பண்டு மாவட்டம் வாரியாக துவங்கப்படும்.
*உணவு டெலிவரி செய்யும் கிக் தொழிலாளர்களை பாதுகாக்க நாடு முழுதும் சட்டம் இயற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து