தி.மு.க.,- ம.தி.மு.க கூட்டணி : இன்று தொகுதிப் பங்கீடு முடிவு?
கூட்டணியில் ஒரு இடத்தை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தி.மு.க., முன்வந்திருக்கிறது. ஓர் இடத்தை ஏற்கலாமா என்பது குறித்து அவசர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது, ம.தி.மு.க.,
லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். அதேநேரம், தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.
தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் ம.தி.மு.க.,நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ம.தி.மு.க., கோரியது. ஏற்கெனவே, ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டதால், ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்குவதாகவும் அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும், ராஜ்யசபா சீட் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரண்டு லோக்சபா தொகுதிகளை ஒதுக்கினால் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என ம.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனால் இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை சரிசெய்வதற்கான ஆலோசனையில் ம.தி.மு.க., இறங்கியுள்ளது. ம.தி.மு.க.,வின் தலைமையகமான தாயகத்தில் இன்று நடக்கும் நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து