ஒதுங்கும் முத்துசாமி உடன்பிறப்புகள் 'அப்செட்'

வரும் லோக்சபா தேர்தலில், கோவையை கூட்டணி கட்சிகளுக்கு தாரைவார்க்காமல், தி.மு.க.,வே போட்டியிட வேண்டுமென, கட்சியினர் விரும்புகின்றனர். கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில், கட்சி தலைமைக்கு முத்துசாமி அழுத்தம் கொடுக்காத காரணத்தால், உடன்பிறப்புகள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கோவை லோக்சபா ஆறு சட்டசபை தொகுதி மக்களுக்கும் அறிமுகமான வேட்பாளர்கள் யாரும் தி.மு.க.,வில் இல்லை என கூறி, மா.கம்யூ.வுக்கோ அல்லது கமலுக்கோ தொகுதியை தாரை வார்க்க நினைக்கின்றனர்.

பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, கரூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, பணிகளை மேற்கொண்டார்.

மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களை, தி.மு.க.,வில் இணைத்து முக்கிய பொறுப்புகள் பெற்றுக் கொடுத்தார். அவ்வாறு கட்சி மாறி வந்தவர்கள் யாரும் இப்போது கட்சிக் கூட்டங்களுக்கு கூட தலைகாட்டுவதில்லை.

தற்போதுள்ள பொறுப்பு அமைச்சர் முத்துசாமியும் ஆர்வம் காட்டுவதில்லை. தி.மு.க., நேரடியாக போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என, தலைமைக்கு அழுத்தம் கொடுக்காமல், தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என பட்டும்படாமல் ஒதுங்கிச்செல்கிறார்.

தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., எம்.பி., வந்து விட்டால், தங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல், பொறுப்பாளர் பதவி கைமாறி விடுமோ என்கிற எண்ணத்தால், அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறாரா என்கிற சந்தேகம் கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



சரியா இருக்காது!'

'கோவையில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், லோக்சபா தேர்தலில் தி.மு.க., போட்டியிடுமா' என, அமைச்சர் முத்துசாமியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு, ''கூட்டணி கட்சிகளின் தலைமையுடன் தி.மு.க., தலைமை பேசி வருகிறது. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதை, 100 சதவீதம் செயல்படுத்துவோம், ஒவ்வொரு கட்சிக்கும் ஆசை உண்டு. தி.மு.க., போட்டியிட வேண்டும் என கட்சியினருக்கு விருப்பம் இருக்கிறது,'' என்றார்.'பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், கோவையை தி.மு.க.,வுக்கு கேட்டீர்களா' என கேட்டதற்கு, ''கட்சி தலைமையிடம் நாங்கள் பேசியதை, பொதுவெளியில் சொல்வது சரியாக இருக்காது; தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதை செயல்படுத்துவோம்,'' என, நழுவினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)