பெண்களின் தலைமைப் பண்பை நம்பாத காங், கட்சி : விஜயதரணி விமர்சனம்
"பெண்களுக்கு தலைமைப் பண்பு இருப்பதை நம்பாத கட்சியில் இருந்து நான் வெளியேறி உள்ளேன்" என, பா.ஜ.,வில் விஜயதரணி தெரிவித்தார்.
விளவங்கோடு சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சிவகங்கை காங்., எம்.பி, கார்த்தி சிதம்பரம், "மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்த்தெடுக்கப்பட்ட விஜயதாரணி, பா.ஜ., வில் சேர்ந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது" எனக் கூறியிருந்தார்.
இது குறித்து விஜயதரணி கூறியதாவது:
ஒரு கட்சியில் பல ஆண்டுகளாக பயணிக்கிறோம், ஆனால், பெண்களுக்கு தலைமைப்பண்பு இருப்பதை நம்பாத கட்சியில் இருந்து நான் வெளியேறி உள்ளேன். இது கார்த்தி சிதம்பரத்துக்கும் தெரியும். இன்றைக்கு பெண்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பிரதமர் மோடி பல விஷயங்களை செய்து வருகிறார்.
தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயணம் வாயிலாக பெரிய எழுச்சியை உண்டாக்கி இருக்கிறார். நிச்சயமாக பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்குவோம் என மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பா.ஜ.,வில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து