Advertisement

'திருவள்ளூருக்கு நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!'

'நான் தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிடப் போகிறேன்' என, திருவள்ளூர் காங்., - எம்.பி.,ஜெயகுமார் அலப்பறை செய்வது, தி.மு.க.,வினரை கடுப்பேற்றி வருகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் தனி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் போட்டியிட, தற்போது தமிழக காங்., தலைவ ராகவும், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ள செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்தார். ஆனால், டில்லி செல்வாக்கை பயன்படுத்தி, ஜெயகுமார் வாய்ப்பை தட்டிப்பறித்தார்.

இதற்காக, செல்வப்பெருந்தகை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை, கட்சி மேலிடத்தில் அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

எம்.பி.,யாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ஜெயகுமார், தொகுதிகளில் நடந்த கூட்டணி கட்சியினர், காங்கிரசார் இல்ல நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அவ்வப்போது பொது மக்களை சந்தித்து கோரிக்கைகளை பெற்றார். லோக்சபா கூடும் நாட்களில் தவறாமல் பங்கேற்ற ஜெயகுமார், தொகுதியில் முக்கிய பிரச்னைகள் குறித்து அதிகம் பேசி, மத்திய அமைச்சர்களிடம் பதில் பெற்றுள்ளார். ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு மட்டுமின்றி, இப்போது வரை அவர் செல்லவே இல்லை என, தி.மு.க.,வினர் குமுறுகின்றனர். இந்த தொகுதியை, வி.சி., அல்லது காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், 'நான் தான் மீண்டும் வேட்பாளர்' என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, ஜெயகுமார் கூறி வருகிறார். அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரை கடிதத்தை ஏற்கனவே வழங்கி விட்டதாகவும் அவர் கூறி வருகிறார்.

இது, தி.மு.க.,வினரை கடுப்பேற்றி வருகிறது. தமிழக காங்., தலைவர் பதவியை செல்வப்பெருந்தகைக்கு வழங்காமல் தடுப்பதற்காக, டில்லியில் தீவிர முயற்சி எடுத்தார் ஜெயகுமார். அதையும் மீறி செல்வப்பெருந்தகை தலைவராகி விட்டார்.

அதனால், ஜெயகுமாருக்குதொகுதியை ஒதுக்க, செல்வப்பெருந்தகை விரும்பமாட்டார் என்ற நம்பிக்கையில், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.,வினர் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்