Advertisement

தமிழகத்தில் வித்தியாசமான தொகுதி நீலகிரி... ஏன்?

தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளில் நீலகிரி மட்டும் வித்தியாசமாக நான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்து உள்ளது.

லோக்சபா தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அன்னுார் வட்டாரத்தில், பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க.,வினர் போட்டி போட்டுக்கொண்டு சுவர்களில் சின்னம் வரைந்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி தொகுதி தமிழகத்திலேயே வித்தியாசமான தொகுதியாக உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 39 எம்.பி., தொகுதிகள் உள்ளன, மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், தலா ஆறு தொகுதிகள் வீதம் 39 எம்.பி., தொகுதிகள் உள்ளன. இதில் கோவை எம்.பி., தொகுதியில், கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் என ஆறு தொகுதிகள் அடங்கியுள்ளன. இரண்டு மாவட்டங்களில் இத்தொகுதி அமைந்துள்ளது.

பொள்ளாச்சி எம்.பி., தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகியவை கோவை மாவட்டத்திலும், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரு தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளன. இதுவும் இரண்டு மாவட்டங்களில் அமைந்துள்ளது.

திருப்பூர் எம்.பி., தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை ஆகியவை ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. இதுவும் இரண்டு மாவட்டங்களில் அமைந்துள்ளது.

பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள எம்.பி., தொகுதிகள் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் நீலகிரி தொகுதி நான்கு மாவட்டங்களில் பரந்து விரைந்துள்ளது. நீலகிரி எம்.பி., தொகுதியில் கூடலூர் (தனி தொகுதி), ஊட்டி, குன்னுார் ஆகிய மூன்று தொகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி (தனி தொகுதி) திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் (தனி தொகுதி) ஈரோடு மாவட்டத்திலும் உள்ளது.

இதனால், நீலகிரி தொகுதி எம்.பி., நான்கு மாவட்டங்களில் கலெக்டர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தொகுதி பிரச்னை குறித்து பேச வேண்டி உள்ளது. நான்கு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் வளர்ச்சி மன்ற கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கரூர் தொகுதிகள் மட்டுமே நான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளன. மற்ற எம்.பி.,தொகுதிகள் பெரும்பாலும் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. ஐந்து எம்.பி., தொகுதிகள் மட்டும், மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்து உள்ளன.

மேலும் எம்.பி., தொகுதிக்குள் மூன்று எம்.எல்.ஏ., தனி தொகுதிகள் உள்ளதும் நீலகிரி தொகுதியில் தான். கூடலூர், அவிநாசி, பவானிசாகர் என மூன்று தனி தொகுதிகள் நீலகிரி எம்.பி., தனி தொகுதிக்குள் உள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்