ராஜ்யசபா எம்.பி., ஆன சோனியா - போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் ஐந்து முறை போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர், 1999 தேர்தலில் களமிறங்கினார். கடந்த 2004 தேர்தல் வரையில் உ.பி., மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த லோக்சபா தேர்தலின்போது, வயது மற்றும் உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங்களால், இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனப் பேசி வந்தார்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக சில நாள்களுக்கு முன்னர் ராஜஸ்தான் வந்திருந்தார். அதன்படி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி,யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் பா.ஜ., தலைவர்கள் சுன்னிலால் கராஸியா, மதன் ரத்தோர் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த சோனியா, முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளார்.
வாசகர் கருத்து